Thursday, January 3, 2019

ஓசை


தென்றல் வீச , அலைகள் ஓங்க
நீ பாடடா , நம் சுதந்திர ஓசை.

அடங்காதே  , மிரளாதே,
உன் குரல் அடர் உடைக்கும்,
நம் வாழ்வு இனி மண்ணுக்கும் இசைக்கும் .


பாவம் காற்றில்  நடனம் ஆட
மனம் மோகித்து இன்பம் பெற
பாடடா,பாடடா
நம் சுதந்திர ஓசை.

ஏங்கும் உன்னிதம் இங்கு உள்ளதோ
வியப்பும் ஒரு இதம் தருமோ,
 பாடடா,பாடடா
நம் மறுவழி ஓசை.

எத்திசையும் உறுதி ஓங்கும்
அகம் நம்பி பலம்  ஓதும்
இனி பாடடா,பாடடா
நம் பரம்  ஓசை.

தென்றல் வீச , அலைகள் ஓங்க
நீ பாடடா , நம் சுதந்திர ஓசை.

அடங்காதே  , மிரளாதே,
உன் குரல் அடர் உடைக்கும்,
நம் வாழ்வு இனி மண்ணுக்கும் இசைக்கும் .










x